பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு உதவி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : கோவை, ராஜலட்சுமி காலனி பகுதியில், கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரோட்டரி சமூக நல அமைப்பு, ஏபிஆர் இன்ப்ரோ டிரஸ்ட் மற்றும் ஜேபிஎன் டிரஸ்ட் சார்பில், நிவாரண உதவி மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரோட்டரி சமூக நல அமைப்பு தலைவர் பிரேமானந்தன் தலைமை வகித்தார். கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட

கோவை : கோவை, ராஜலட்சுமி காலனி பகுதியில், கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரோட்டரி சமூக நல அமைப்பு, ஏபிஆர் இன்ப்ரோ டிரஸ்ட் மற்றும் ஜேபிஎன் டிரஸ்ட் சார்பில், நிவாரண உதவி மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ரோட்டரி சமூக நல அமைப்பு தலைவர் பிரேமானந்தன் தலைமை வகித்தார். கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. ஒன்பதாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் துவங்க வங்கி கடனுதவி பெற, ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைவர் பிரேமானந்தன் கூறுகையில், ''கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கபட்ட பல குடும்பங்கள், பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக, எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்,'' என்றார்.ஏபிஆர் இன்ப்ரோ டிரஸ்ட் தலைவர் ஆனந்த் பிரபு, ரோட்டரி மிட்டவுன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், ஜேபிஎன் டிரஸ்ட் தலைவர் செண்பகவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X