பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் 319 'சீட்' காலியிருக்கு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : கோவை அரசு கலை கல்லுாரியில், இளநிலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. மொத்தமுள்ள, 1,745 இடங்களில், 1,426க்கு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.ஆக., 26 முதல் மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. இறுதிக்கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. அரசு அறிவித்த, 25 சதவீத அடிப்படையில், 312 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில்,''கூடுதலாக

கோவை : கோவை அரசு கலை கல்லுாரியில், இளநிலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. மொத்தமுள்ள, 1,745 இடங்களில், 1,426க்கு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஆக., 26 முதல் மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. இறுதிக்கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. அரசு அறிவித்த, 25 சதவீத அடிப்படையில், 312 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில்,''கூடுதலாக சேர்க்கப்பட்ட இடங்களையும் சேர்த்து, 1,745ல் 1,426 பேர் சேர்ந்துள்ளனர். கலந்தாய்வு முடிவில், 319 இடங்கள் மீதமுள்ளன. கலந்தாய்வில் பங்கேற்று பதிவு செய்த மாணவர்கள், இன்று காலை, 9:00 மணிக்கு பங்கேற்று மீதமுள்ள இடங்களில் சேரலாம். கல்லுாரியில் சேர்ந்து பல்வேறு காரணங்களால் பாதியில் வேறு கல்லுாரிகளுக்குச் சென்றவர்களால் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X