பொது செய்தி

தமிழ்நாடு

வேட்டை தடுப்பு காவலர் பணி நிரந்தரம்'; வனத்துறை அமைச்சர் உறுதி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : ''10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.கோவையில் நேற்று அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து, தமிழகத்தை மீட்க அரசு மேற்கொண்ட பணிகளுக்கு பலன் கிடைத்துள்ளது; தொற்று குறைந்து வருகிறது. கோவை மாவட்டத்தில், தற்போது, 181 பேரே தொற்றால்

கோவை : ''10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து, தமிழகத்தை மீட்க அரசு மேற்கொண்ட பணிகளுக்கு பலன் கிடைத்துள்ளது; தொற்று குறைந்து வருகிறது. கோவை மாவட்டத்தில், தற்போது, 181 பேரே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக, 10 ஆண்டுக்கும் மேல் பணியாற்றுவோர், முதல்கட்டமாக நிரந்தரம் செய்யப்படுவர்; மற்றவர்களும் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர். முந்தைய ஆட்சியில், வன விலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை.

வன விலங்குகளால் பயிர் பாதிக்கப்பட்டோருக்கும் நிவாரணம் வழங்கவில்லை. நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் வனப்பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க, 'கிரீன் மிஷன்' திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. மனித - வன விலங்கு மோதலுக்கு தீர்வு காணவும், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டியுள்ளது. இப்பணிகளுக்கு, 2,000 கோடி நிதி தேவை என, மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது; தர ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கான பரிந்துரை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.அப்போது, கலெக்டர் சமீரன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X