பொது செய்தி

தமிழ்நாடு

2050ல் சூரியன் தகிதகிப்பான்! விவசாயிகள், விஞ்ஞானிகளுக்கு எச்சரிக்கை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : ''காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கும், உணவு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 2050ல் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் ரகங்களை விஞ்ஞானிகள் கண்டறிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, வேளாண் பல்கலை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில், துணைவேந்தர்கள் மாநாடு,
 2050ல் சூரியன் தகிதகிப்பான்!  விவசாயிகள், விஞ்ஞானிகளுக்கு எச்சரிக்கை

கோவை : ''காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கும், உணவு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 2050ல் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் ரகங்களை விஞ்ஞானிகள் கண்டறிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, வேளாண் பல்கலை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில், துணைவேந்தர்கள் மாநாடு, டில்லியில் சமீபத்தில் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, காணொளி மூலம் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சி, பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில், பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கும், உணவு பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தலாக இருக்கிறது. 2050ல் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என கணிப்புகள் காட்டுகின்றன. தொழில்நுட்ப உதவியுடன் வறட்சியை தாங்கும் பயிர் ரகங்களை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டியது கட்டாயம். மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பது; மண் வளம் மேம்படுத்துவது; நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கீதா, உழவியல் பேராசிரியர் சோமசுந்தரம், பயிற்சி பிரிவு தலைவர் ரவிக்குமார் தியோடர், விரிவாக்க மைய இயக்குனர் ஜவஹர்லால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்துக்களை பரிமாறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X