பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் 'கவுன்சிலிங்' 100 பேருக்கு 'விடியல்'

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு வாழ்க்கையை மாற்றி விடுகிறது. கோவை மாவட்டத்தில், நடப்பாண்டில் பதிவான, 951 இறப்பு வழக்குகளில், 480க்கும் மேற்பட்டவை தற்கொலைகள். கடந்தாண்டு பதிவான, 1,300 இறப்பு வழக்குகளில், 650 தற்கொலை வழக்குகள்.தற்கொலையை தடுக்க, கோவை மாவட்ட போலீசார், எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையில், 'விடியல்' என்ற கவுன்சிலிங் மையத்தை துவக்கி உள்ளனர். உளவியல் ஆலோசனை

கோவை : நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு வாழ்க்கையை மாற்றி விடுகிறது. கோவை மாவட்டத்தில், நடப்பாண்டில் பதிவான, 951 இறப்பு வழக்குகளில், 480க்கும் மேற்பட்டவை தற்கொலைகள். கடந்தாண்டு பதிவான, 1,300 இறப்பு வழக்குகளில், 650 தற்கொலை வழக்குகள்.

தற்கொலையை தடுக்க, கோவை மாவட்ட போலீசார், எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையில், 'விடியல்' என்ற கவுன்சிலிங் மையத்தை துவக்கி உள்ளனர். உளவியல் ஆலோசனை பெற, 0422 -- 2300 999 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையம், 24 மணி நேரமும் செயல்படுகிறது; சுழற்சி முறையில் போலீசார் பணிபுரிகின்றனர்.கடந்த, 15 நாட்களில், தற்கொலை எண்ணம் ஏற்பட்ட, 100 பேருக்கு 'கவுன்சிலிங்' வழங்கி மீட்டுள்ளனர்.

எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில்,''மன அழுத்தம், குடும்ப பிரச்னை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தற்கொலை எண்ணம் ஏற்படுவோருக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றன. போதை பொருட்களுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வர நினைப்போருக்கும் தீர்வு வழங்கப்படுகிறது. சட்டப்பிரச்னைகளில் சிக்குபவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்கொலை எண்ணம் ஏற்படுவோர் விடியல் எண்ணுக்கு அழைக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X