வாத்தியாராக மாறிய மாநகராட்சி கமிஷனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாத்தியாராக மாறிய மாநகராட்சி கமிஷனர்

Added : அக் 01, 2021
Share
கோவை : கோவை சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.கோவை மாநகராட்சி சார்பில், 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால்

கோவை : கோவை சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி சார்பில், 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.நாளிதழ் வாசிப்பு, கரும்பலகை வாயிலாக கணிதத்திறன் என, கல்வி கற்றல் திறனை மாணவர்களிடம் கண்டறிந்தார். செயல்முறை விளக்கத்தாலும் மாணவர்கள் தங்களது கல்வி அறிவுத்திறனை வெளிப்படுத்தினர்.

ஒரு வகுப்பறையில், கணக்கு போடுவது எப்படி என, கற்றுக் கொடுத்தார். பின், ஒரு மாணவனை வரவழைத்து, கணக்குப்போட்டுக் காண்பிக்க அறிவுறுத்தி, அதை சரிபார்த்தார்.சிறப்பான முறையில் கல்வித்திறனை வெளிப்படுத்திய மாணவிக்கு மாநகராட்சி கமிஷனர் புத்தகம் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பள்ளி நுாலகம், கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X