பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர்களே ஜாக்கிரதையா இருங்க! 3 ஆண்டுகளில் 300 பேருக்கு மாரடைப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : கடந்த மூன்று ஆண்டுகளில், மாரடைப்பு காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில், 300 இளைஞர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதில், மற்ற நாடுகளை காட்டிலும், நமது நாடு முன்னிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்கு காரணம், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, அதிக ரத்தக்கொழுப்பு, உடல் பருமன், புகைபிடித்தல், மதுப்பழக்கம், அதிகமாக உணர்ச்சி
இளைஞர்களே ஜாக்கிரதையா இருங்க! 3 ஆண்டுகளில் 300 பேருக்கு மாரடைப்பு

கோவை : கடந்த மூன்று ஆண்டுகளில், மாரடைப்பு காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில், 300 இளைஞர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதில், மற்ற நாடுகளை காட்டிலும், நமது நாடு முன்னிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்கு காரணம், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, அதிக ரத்தக்கொழுப்பு, உடல் பருமன், புகைபிடித்தல், மதுப்பழக்கம், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், துாக்கமின்மை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.மேலும், உடலில் 'ஹோமோசிஸ்டின்', 'லைப்போ புரொட்டீன் ஏ' ஆகிய திரவங்கள், 15 சதவீதத்துக்கும் அதிகமாக சுரப்பதால், ரத்தக்கட்டியாக மாறி மாரடைப்பு ஏற்படுகிறது. தவிர, மரபு ரீதியாகவும் இதய நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

அவ்வகையில், கோவை அரசு மருத்துவமனையில், கடந்த மூன்று ஆண்டுகளில், 300 இளைஞர்கள் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறை டாக்டர் நம்பிராஜன் கூறியதாவது:நமது நாட்டில் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 40 வயதுக்கு கீழ், 11.7 சதவீதத்தினருக்கு மாரடைப்பு வருகிறது. இருதய நோயால் இறப்பவர்களில், 50 வயதுக்கு கீழ், 50 சதவீதம் பேர் இருக்கின்றனர். மேலும், 25 சதவீதம் மாரடைப்பு, 40 வயதுக்கு கீழ் வருவதாக தெரிவிக்கின்றன.

கடந்த, 2019 முதல் இதுவரை, 40 வயதுக்கு கீழ், 300 பேருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 18 வயதில் இருந்து, 30 வயதுக்குள், 35 பேர் உள்ளனர். 31ல் இருந்து, 40 வயதுக்குள், 265 பேர் உள்ளனர்.மேலும், 300 பேரில் ஆண்கள் 250 பேர், பெண்கள் 50 பேர். இவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், புகைபிடித்தல், மதுப்பழக்கம் 150 பேர், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு 60 பேர், உடல் பருமன் 49 பேர், மரபு வழி மாரடைப்பு 41 பேருக்கு இருந்தது. இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்கள் அதிக கவனம் செலுத்துவது முக்கியம்.இவ்வாறு, கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X