தற்காலிக குடியிருப்பும் ரத்தாகும் நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக குடியிருப்பும் ரத்தாகும் நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ்

Added : அக் 01, 2021
Share
கோவை : 'உக்கடம், சி.எம்.சி., காலனியில் தொடர்ந்து வசிக்கும் நபர்களுக்கு வழங்கிய தற்காலிக குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்படும்' என, மாநில நெடுஞ்சாலைத்துறை எச்சரித்துள்ளது.உக்கடம் மேம்பாலம் கட்டுமானத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. துாய்மை பணியாளர்களுக்கு புல்லுக்காடு மைதானத்தில் தற்காலிக குடியிருப்பு கட்டிக்

கோவை : 'உக்கடம், சி.எம்.சி., காலனியில் தொடர்ந்து வசிக்கும் நபர்களுக்கு வழங்கிய தற்காலிக குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்படும்' என, மாநில நெடுஞ்சாலைத்துறை எச்சரித்துள்ளது.

உக்கடம் மேம்பாலம் கட்டுமானத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. துாய்மை பணியாளர்களுக்கு புல்லுக்காடு மைதானத்தில் தற்காலிக குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், சில தொழிலாளர்கள் வீட்டை காலி செய்யாமல் இருக்கின்றனர். அவர்களது வீட்டு கதவில், மாநில நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் ஒட்டி வருகிறது.அதில் கூறியிருப்பதாவது:

சி.எம்.சி., காலனியில் வசிப்போரின் இருப்பிடம், உக்கடம் மேம்பாலப் பணிக்கு தேவைப்பட்டது. குடிசை மாற்று வாரியம் வாயிலாக நிரந்தர குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. காலதாமதத்தை தவிர்க்க, மாற்று ஏற்பாடாக, கோவை மாநகராட்சி புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பு வழங்கப்பட்டது.சிலர் இதுவரை தற்காலிக குடியிருப்பை முறையாக பயன்படுத்தாமல், சி.எம்.சி., காலனியில் குடியிருப்பதாக தெரிகிறது. அறிவிக்கை கிடைத்த மூன்று நாட்களுக்குள் தற்காலிக குடியிருப்புக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், அறிவிக்கை கிடைத்த ஏழு நாட்களில் தற்காலிக குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X