பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி படிப்புக்கு நல்ல காலம் பிறக்கிறது

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 1990 வரை, அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தும்போது, தொழிற்கல்வி பாடப்பிரிவு உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். பின், அறிவியல் பாடப்பிரிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்


கோவை : அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 1990 வரை, அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தும்போது, தொழிற்கல்வி பாடப்பிரிவு உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். பின், அறிவியல் பாடப்பிரிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கையை காரணம் காட்டியும், பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மட்டும், தொழிற்கல்வி பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

துவக்கத்தில் தொழிற்கல்வியில் வேளாண்மை, இயந்திரவியல், மின்னணுவியல் உள்ளிட்ட 14 பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், ஆசிரியர்கள் நியமிக்காததால், அத்தகைய பாடப்பிரிவுகள் முடங்கி வருகின்றன. சொற்ப பள்ளிகளில், வேளாண்மை படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களை, தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட வாரியாக, காலியிடங்கள் பட்டியல் திரட்டப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X