ஷிவ் நாடார், மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு 'குளோபல் லீடர்ஷிப்' விருது அறிவிப்பு

Added : அக் 01, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் வழங்கும், 'குளோபல் லீடர்ஷிப் விருது' இந்திய தொழிலதிபர்கள் ஷிவ் நாடார், மல்லிகா ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2007ல் இருந்து, அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் சிறந்த தொழிலதிபர்களுக்கு 'குளோபல் லீடர்ஷிப் விருது' வழங்கி வருகிறது. 2021ம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப் பட்டது.மிகுந்த
USIBC, Global Leadership Award, Shiv Nadar, Mallika Srinivasan

வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் வழங்கும், 'குளோபல் லீடர்ஷிப் விருது' இந்திய தொழிலதிபர்கள் ஷிவ் நாடார், மல்லிகா ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2007ல் இருந்து, அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் சிறந்த தொழிலதிபர்களுக்கு 'குளோபல் லீடர்ஷிப் விருது' வழங்கி வருகிறது. 2021ம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப் பட்டது.


மிகுந்த பெருமை


இந்தியாவின் ஹெச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார், 76, 'டாபே' நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மல்லிகா ஸ்ரீனிவாசன், 61, ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் இருவருக்கும் விருது வழங்கப்படுகிறது.


latest tamil news


இது குறித்து அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் தேசாய் பிஸ்வால் கூறியதாவது: விருது பெறும் ஷிவ் நாடார், ஹெச்.சி.எல்., தொழில்நுட்ப நிறுவனத்தை துவங்கி, நவீன தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி, உலகளாவிய தொழிலதிபராக திகழ்கிறார்.

டாபே நிறுவன தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன், விவசாயத் துறையில் உற்பத்தி சார்ந்து மிகப் பெரும் உயரத்தை எட்டியுள்ளார். விவசாயத் துறையில் உற்பத்தியை அதிகரிக்க புதுமைகளை புகுத்தி சாதனை படைத்துள்ளார். இருவருக்கும் விருது வழங்குவதில் கவுன்சில் மிகுந்த பெருமை அடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலதிபர் ஷிவ் நாடார் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் சிவசைலத்தின் மகளான மல்லிகா ஸ்ரீனிவாசனின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. 'டாடா' குழும தலைவர் என்.சந்திரசேகரன், 'லாக்ஹீட் மார்ட்டின்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டெய்க்லெட், 'கூகுள்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் கடந்த ஆண்டுகளில் இந்த விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
umari siva - tambaram,இந்தியா
03-அக்-202116:25:40 IST Report Abuse
umari siva shiv nadar
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
03-அக்-202114:01:12 IST Report Abuse
Nesan தமிழன்டா... வாழ்க பல்லாண்டு... வளர்க, தொடர்க உங்கள் பணி
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202111:47:54 IST Report Abuse
duruvasar இரு சிறுகுறு சில்லரை வியாபாரிகளை கவுரவித்ததிற்க்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X