மின் பற்றாக்குறையால் தவிக்கும் சீனா| Dinamalar

மின் பற்றாக்குறையால் தவிக்கும் சீனா

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (15)
Share
சீனாவில், கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது. மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 20 மாகாணங்களில், மின் தட்டுப்பாடு காணப்படுகிறது.இதன் காரணமாக, மின்சாரத்தை முறைவைத்து வழங்குவதற்கான திட்டத்தை அந்நாட்டின் மின் துறை வெளியிட்டுள்ளது. இதனால், தொழிலகங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அல்லது வேலை நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன. கடைக்காரர்கள்,
China, Powercut, Power Crisis, சீனா, மின்சாரம், மின்தடை,

சீனாவில், கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது. மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 20 மாகாணங்களில், மின் தட்டுப்பாடு காணப்படுகிறது.

இதன் காரணமாக, மின்சாரத்தை முறைவைத்து வழங்குவதற்கான திட்டத்தை அந்நாட்டின் மின் துறை வெளியிட்டுள்ளது. இதனால், தொழிலகங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அல்லது வேலை நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன. கடைக்காரர்கள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கடை நடத்தும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் மின் உற்பத்தியில், அனல் மின்சாரத்தின் பங்கு 56 சதவீதம். இதற்கு அதிகளவில் நிலக்கரி தேவை. 2060ம் ஆண்டுக்குள் சீனாவின் கார்பன் உமிழ்வை முற்றிலும் தடுத்து நிறுத்திவிடும் முடிவை அந்நாடு எடுத்தது.

இதை நடைமுறைப்படுத்துவதற்காக, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.உள்நாட்டு நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுப்பது குறைந்து வருகிறது. சுரங்கங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டதால், சுரங்க பாதுகாப்பு நெறிமுறைகளும் கடுமையாகியுள்ளன. இதனால் உள்நாட்டி உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் அளவு பாதிப்படைந்துஉள்ளது.


விண்ணை முட்டியது


latest tamil news


கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புக்குப் பின்னர், பல்வேறு மேலைநாடுகளில் வியாபாரம் பெருகியது. சீனப் பொருட்களின் தேவை அதிகமானது.சீனாவில் உற்பத்தியை அதிகப்படுத்த முடியவில்லை. காரணம், மின் தட்டுப்பாடு. நிலக்கரி உற்பத்தி பெருகவில்லை என்பதோடு, மாற்று எரிசக்தியின் அளவும் உயரவில்லை. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யலாம் என்று சீனா முடிவு செய்து, ஐரோப்பிய நாடுகளைப் அணுகியபோது, அங்கே நிலக்கரியின் விலை விண்ணை முட்டியது. ஐரோப்பாவிலும் எரிசக்தி பற்றாக்குறை நிலவுவதால், இந்த விலையேற்றம்.

வழக்கமாக, ஆஸ்திரேலியாவில் இருந்து தான் சீன நிலக்கரி இறக்குமதி செய்யும். ஆனால், கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் எங்கே தோன்றியது என்பதை விசாரிக்க வேண்டும் என்று கோரிய நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. அதேபோல், சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அந்நாடு கொண்டுவந்த சட்டத்தையும் ஆஸ்திரேலியா கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.இந்த விமர்சனங்களுக்குப் பழிவாங்கும் விதமாக, ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டது.

விலை அதிகமான நிலக்கரியை வாங்கி வந்து, மின் உற்பத்தியைச் செய்ய சீன நிறுவனங்கள் மறுக்கின்றன. காரணம், மின் கட்டணத்தை அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்திக் கொள்வதற்கு சீன அரசு அனுமதி தரவில்லை. இந்தச் சூழ்நிலையில், சீனாவில் மழைக் காலமும் துவங்கி விட்டது. வட மாகாணங்களில் தான் நிலக்கரி சேமிப்பு மையங்கள் உள்ளன.


latest tamil newsஎட்டவில்லை


அவை, அடுத்து வரும் பனிப்பொழிவு மாதங்களை மனத்தில் கொண்டு, நிலக்கரியை வெளி மாகாணங்களுக்கு வழங்க மறுத்துவிட்டன. இதனாலும், நிலக்கரி தட்டுப்பாடு உயர்ந்தது.பெரிய தொழிற்சாலைகள், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 31 மாகாணங்களில் 20 மாகாணங்களில் உள்ள பெரும் தொழிற்சாலைகள் இந்த இலக்கை எட்டவில்லை. இதனால், அந்நாட்டு அரசு, மின்சாரம் அதிகம் தேவைப்படும் நேரத்தில், பெரும் தொழிற்சாலைகள், உற்பத்தியை நிறுத்திவிட உத்தரவிட்டது.


'ரேட்டிங்' நிறுவனங்கள்வேறு சில தொழிற்சாலைகளை அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடிவிடவும் கட்டளை இட்டது.இதனால், உலகின் பெரும் நிறுவனங்களான 'ஆப்பிள்' மற்றும் 'டெஸ்லா' போன்றவை ஜெனரேட்டர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. 'இண்டெல், நிவ்டியா, குவால்காம்' போன்ற நிறுவனங்களும் பாதிப்பு அடைந்துள்ளன.மின் தடையால், அந்நாட்டின் அலுமினிய உற்பத்தி 7 சதவீதமும், சிமென்ட் உற்பத்தி 29 சதவீதமும் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காகிதம், கண்ணாடி, ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்தியும் கடுமையாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒட்டுமொத்தமாக, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 8.2 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக சரியும் என்று மதிப்பிட்டுள்ளன இரண்டு மிகப்பெரிய 'ரேட்டிங்' நிறுவனங்கள்.
- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X