தி.மு.க., மட்டுமின்றி, அ.தி.மு.க., - காங்., வலுவாக இருக்கும் தொகுதிகளிலும் இப்படித் தானே நடக்கிறது

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: உள்ளாட்சி தேர்தலிலும் பட்ட, பகலிலேயே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. பதவிகள் பகிரங்கமாக ஏலம் விடப்படுகின்றன. இதை மாநில தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான வலிமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா என்று கேட்டால், அது கேள்விக்குறி தான்.தி.மு.க., மட்டுமின்றி, அ.தி.மு.க., - காங்., வலுவாக இருக்கும் தொகுதிகளிலும்
தி.மு.க., மட்டுமின்றி, அ.தி.மு.க., - காங்., வலுவாக இருக்கும் தொகுதிகளிலும் இப்படித் தானே நடக்கிறது

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: உள்ளாட்சி தேர்தலிலும் பட்ட, பகலிலேயே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. பதவிகள் பகிரங்கமாக ஏலம் விடப்படுகின்றன. இதை மாநில தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான வலிமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா என்று கேட்டால், அது கேள்விக்குறி தான்.


தி.மு.க., மட்டுமின்றி, அ.தி.மு.க., - காங்., வலுவாக இருக்கும் தொகுதிகளிலும் இப்படித் தானே நடக்கிறது என புகார்கள் வருகின்றன. எனவே, காசு இல்லாதவர்கள் கட்சி நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. முறைகேடுகளுக்கு இந்த கட்சி தான் காரணம் என எந்த கட்சியையும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது!தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை; மக்களுக்கான திட்டம் செயல்படுத்தவில்லை' என்கிறார் தமிழக அமைச்சர் பொன்முடி. அதை, '10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்த, தி.மு.க., விடவில்லை. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த விடவில்லை' என்று தான் சொல்ல வேண்டும்.


அ.தி.மு.க., அரசு எதை அறிவித்தாலும் ஊழல், முறைகேடு என்றனர். எந்த வளர்ச்சித் திட்டம் வந்தாலும் அதை எதிர்த்தனர். இப்போது வசைபாடுகின்றனர்!தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு: தமிழகத்திற்கே உரித்தான சிலம்பக் கலை, தமிழகத்தில் எங்கு தோன்றியது; எப்படி வளர்ந்தது என்பது குறித்து அரசு ஆராய்ச்சி செய்யும். அதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.


இதெல்லாம் வீண் வேலை. இதை தவிர்த்து, சிலம்ப கலை கற்றுக் கொடுக்கும் மையங்களை பல இடங்களில் துவக்க, அரசு செலவிடலாம்!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு
: மார்க்சிசம், பெரியாரிசம், அம்பேத்கரிசம் ஆகிய கொள்கைகளின் ஒரே இலக்கு, சமத்துவம் தான். இந்திய அளவில் ஜாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை போன்ற கொள்கைகளை கொண்ட ஒரே கட்சி எங்கள் கட்சி தான். அதனால் தான் சனாதன கொள்கைகளை அடிப்படையில் இருந்தே எதிர்க்கிறோம்.


latest tamil news
உங்களின் 30 ஆண்டு கால அரசியலில், ஜாதியை ஒழித்து விட்டீர்களா; பெண்களுக்கு சம உரிமை வழங்கி விட்டீர்களா? உங்களின் வசதி, வாய்ப்பு, உங்கள் கட்சியினரின் செல்வாக்கு தான் பெருகியுள்ளதே தவிர, கொள்கை, கொள்கையாகத் தானே இருக்கிறது!மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை: ஏற்கனவே விலைவாசி உயர்வால் துன்பப்படும் மக்கள் மீது, மேலும் பெட்ரோலிய விலை உயர்வு சுமையை ஏற்றுவது கடும் கண்டனத்திற்குரியது. இன்னும் எத்தனை லட்சம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து சூறையாட முடிவு செய்திருக்கிறீர்கள்?


இன்னும் எத்தனை கோடி ரூபாயை கட்சி நிதியாக வசூலிக்க, அப்பாவி கட்சியினரை இப்படி உசுப்பேற்றி விடுவீர்கள்... மக்களுக்கு எல்லா விபரமும் தெரியும். இனியும், பெட்ரோல் அரசியல் வேண்டாமே!

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
01-அக்-202116:28:04 IST Report Abuse
Suppan "மார்க்சிசம், பெரியாரிசம், அம்பேத்கரிசம்" ஆகியவையெல்லாம் எங்களுக்கு மக்களை ஏமாற்றப் பயன்படுகின்றன . மார்க்சிசம் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறது. ராம் சாமியிசம் ஆண்டவனுக்கே வெளிச்சம்.ஆம்பேட்கரிஸம் பற்றி பேசுவோம் ஆனால் அதன் படி நடக்க மாட்டோம்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
01-அக்-202113:20:27 IST Report Abuse
r ravichandran வடமாவட்டங்களில் கட்ட பஞ்சாயத்து யார் செய்கிறார்கள், எந்த கட்சி செய்கிறது, அதன் மூலம் எத்தனை கோடி ரூபாய் வருவாய் பெறுகிறது என்று அனைவருக்கும் தெரியும்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
01-அக்-202112:58:47 IST Report Abuse
Dhurvesh இந்த க்ரிஷ்ணசாமி தான் 95 லட்சம் வாங்கினார் என்று SEKAR ரெட்டி டைரி சொல்லுது , இவர் வெறும் MLA தான் அப்போது , எப்படி மிரட்டி 95 லட்சம் வாங்கினான் இவன் விளக்கு வானா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X