பொது செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் வழிமறித்த யானைகளால் பரபரப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தி அருகே, நள்ளிரவில் வழிமறித்த யானைகளால், பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரி அம்மன் கோவில் அருகே, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், சத்தி- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடமாடின. வாகனங்களையும் வழிமறித்தன. டிரைவர்கள் பீதி அடைந்தனர். இதனால் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அரை

சத்தியமங்கலம்: சத்தி அருகே, நள்ளிரவில் வழிமறித்த யானைகளால், பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரி அம்மன் கோவில் அருகே, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், சத்தி- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடமாடின. வாகனங்களையும் வழிமறித்தன. டிரைவர்கள் பீதி அடைந்தனர். இதனால் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அரை மணிநேரத்துக்குப் பிறகு யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இந்நிலையில் யானைகள் சாலையில் நடமாடினால், ஏர் ஹாரனை பயன்படுத்தக்கூடாது என்று, வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X