பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பட்டா விபரம் கணினியில் பதிவேற்றம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட விபரங்களை, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில், ஈரோடு மாவட்ட மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விபரங்களை கணினியில் பதிவேற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட விபரங்களை, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில், ஈரோடு மாவட்ட மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் பத்து தாலுகாவிலும் பட்டா விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து டி.ஆர்.ஓ., முருகேசன் கூறியதாவது: மாவட்ட அளவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாக்கள் இருக்கும். கடந்த ஒரு மாதமாக பணி நடந்து வருகிறது. பணி முடிவடையும்போது, பட்டா பெற்ற பயனாளிகள், ஆன்லைனில் தங்கள் பட்டா, சிட்டா விபரங்களை பெறுவது மிகவும் எளிதாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X