பொது செய்தி

தமிழ்நாடு

நஷ்டஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோபி: விபத்து வழக்கில் மூதாட்டிக்கு, நஷ்டஈடு வழங்காததால், கோபியில் அரசு பஸ்சை, நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர். கோபி அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தங்கம்மாள், 65; தம்பி ரங்கசாமியுடன், 2016 செப்.,14ல் கெட்டிசெவியூர் அருகே பைக்கில் சென்றார். எதிரே வந்த அரசு மப்சல் பஸ் மோதியதில் தங்கம்மாள் காயமடைந்தார். நஷ்டஈடு கேட்டு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்,

கோபி: விபத்து வழக்கில் மூதாட்டிக்கு, நஷ்டஈடு வழங்காததால், கோபியில் அரசு பஸ்சை, நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர். கோபி அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தங்கம்மாள், 65; தம்பி ரங்கசாமியுடன், 2016 செப்.,14ல் கெட்டிசெவியூர் அருகே பைக்கில் சென்றார். எதிரே வந்த அரசு மப்சல் பஸ் மோதியதில் தங்கம்மாள் காயமடைந்தார். நஷ்டஈடு கேட்டு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், தங்கம்மாள் வழக்கு தொடர்ந்தார். கடந்த, 2019 ஆக.,19ல் விசாரணைக்கு வந்தபோது, அரசு போக்குவரத்து கழகம், 3.20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். வழங்காததால் கட்டளை நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தார். கடந்த, 2020 நவ.,26ல், அரசு பஸ்சை ஜப்தி செய்ய, நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். இதன்படி கோபியில் இருந்து கோவை செல்ல, நேற்று தயாராக இருந்த அரசு பஸ்சை, நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X