புளியம்பட்டி சொசைட்டியில் நிலக்கடலை மறைமுக ஏலத்துக்கு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புளியம்பட்டி சொசைட்டியில் நிலக்கடலை மறைமுக ஏலத்துக்கு எதிர்ப்பு

Added : அக் 01, 2021
Share
புன்செய்புளியம்பட்டி: பு.புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வியாழக்கிழமை தோறும், நிலக்கடலை ஏலம் நடக்கிறது. நேற்றைய ஏலத்துக்கு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான நிலக்கடலை மூட்டைகளை கொண்டு வந்தனர். இதுவரை நடந்து வந்த நேரடி வாய்மொழி ஏலத்துக்குப் பதிலாக, மறைமுக ஏலம் அறிமுகப்படுத்தி, இரண்டு வாரமாக மறைமுக

புன்செய்புளியம்பட்டி: பு.புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வியாழக்கிழமை தோறும், நிலக்கடலை ஏலம் நடக்கிறது. நேற்றைய ஏலத்துக்கு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான நிலக்கடலை மூட்டைகளை கொண்டு வந்தனர். இதுவரை நடந்து வந்த நேரடி வாய்மொழி ஏலத்துக்குப் பதிலாக, மறைமுக ஏலம் அறிமுகப்படுத்தி, இரண்டு வாரமாக மறைமுக ஏலம் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நேரடி ஏலம் விடக்கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏலத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் மறைமுக ஏலத்தில் குளறுபடி உள்ளதால், நேரடி வாய்மொழி மூலம் ஏலம் நடத்த விருப்பம் தெரிவித்தனர். இதை மனுவாக எழுதி தருமாறு, சொசைட்டி அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களும் எழுதித்தரவே, அடுத்தவாரம் முதல் நேரடி ஏலம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து ஏலம் நடந்தது. இதனால் சொசைட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X