பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்; வரும் 8ல் நடக்கிறது

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஈரோடு: தேசிய தொழில் பழகுனர் திட்டத்தில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம், ஈரோடு மாவட்ட அளவில் தொழில் பழகுனர்களுக்கான 'தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்', ஈரோடு அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் வரும், 8ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப

ஈரோடு: தேசிய தொழில் பழகுனர் திட்டத்தில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம், ஈரோடு மாவட்ட அளவில் தொழில் பழகுனர்களுக்கான 'தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்', ஈரோடு அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் வரும், 8ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப உள்ளனர். இதில் தேர்வு பெற்றால், தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். தற்போது தொழில் பழகுனர் உதவித்தொகை, தொழில் பிரிவுக்கு ஏற்ப, 7,700 ரூபாய் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்ற அனைவரும் உரிய அசல் சான்றிதழ், ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X