பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் நுட்பங்களை பின்பற்றினால் மக்காசோளத்தில் மகசூல் அள்ளலாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஈரோடு: மக்காசோளம் சாகுபடியில், உழவியல் தொழில் நுட்பங்களை பின்பற்றினால், விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் சரவணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 20 ?ஹக்டேரில் மக்காசோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கால்நடை தீவனமாக, மக்களின் உணவு பொருளாக உள்ளதால், இதன் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆண்டு

ஈரோடு: மக்காசோளம் சாகுபடியில், உழவியல் தொழில் நுட்பங்களை பின்பற்றினால், விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.


இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் சரவணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 20 ?ஹக்டேரில் மக்காசோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கால்நடை தீவனமாக, மக்களின் உணவு பொருளாக உள்ளதால், இதன் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடி, புரட்டாசி, தை பட்டம் மட்டுமே உகந்த சூழலாகும். தரமான பூச்சி மற்றும் நோய் தாக்காத விதைகளை தேர்வு செய்து, விதை நேர்த்தி செய்து விதைத்தால் விதைப்பு திறன் அதிகரிக்கும். நிலத்தை நன்கு உழவு செய்து, கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு, 5 டன் மக்கிய தொழு உரமிட வேண்டும். பின், 2 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து, ஒரு ஏக்கருக்கு, 8 கிலோ தேர்வு செய்யப்பட்ட விதைகளை பார்களில், 25 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு, 2 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். நடவு செய்த, 12 முதல், 15 நாட்களுக்குள் பயிர்களை களைதல் வேண்டும். மக்காசோள பயிர் அதிக வறட்சியும், நீரையும் தாங்கி வளராது. எனவே, பயிரின் வளர் நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஒன்பது முதல், 11 முறை நீர் பாய்ச்சல் அவசியம். முக்கிய வளர் நிலையான, 45 முதல், 65 நாட்களுக்கு தண்ணீர் கட்டுவதன் மூலம் அதிக விளைச்சலை பெறலாம். களைகளை கட்டுப்படுத்த விதை விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் களைகொல்லியான அட்ரடாப் மருந்து, 200 கிராமை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். மேலும், 30 முதல், 35 நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை களை எடுப்பதால், பயிர்கள் போட்டியின்றி வளர உதவும். ஊட்டச்சத்துக்களை பொருத்தமட்டில், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுவது சிறந்த மகசூலுக்கு வழி வகுக்கும். அவ்வாறு செய்ய இயலாத பட்சத்தில் ஏக்கருக்கு 100:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை தரவல்ல உரங்களை வழங்கலாம். உர அளவை வேளாண் வல்லுனர் ஆலோசனைப்படி, மூன்று அல்லது நான்கு முறை பிரித்து வழங்குவதன் மூலம் உபயோகத்திறனை அதிகரிக்கலாம். நுண் சத்துக்களை பொருத்தவரை வேளாண் பல்கலை கழகத்தில் நுண்ணூட்ட கலவையை ஏக்கருக்கு, 12 கிலோ வீதம் அடி உரமாக இட வேண்டும். மக்காசோள மேக்சின் நுண்ணூட்டத்தை ஏக்கருக்கு, 3 கிலோ வீதம் பூக்கும் தருணத்திலும், கதிர் உருவாகும் தருணத்திலும், 200 லிட்டர் தண்ணீர் மற்றும் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம். இந்த தொழில் நுட்பங்களை ஒருங்கிணைந்த முறையில் கடைபிடித்தால், மக்காசோள பயிரின் மகசூலை கூடுதலாக பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X