சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு, காரில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து, தாளவாடி போலீசார், மகாஜனபுரம் சோதனைச்சாவடி அருகே, நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு வேன், காரில், 20 பிளாஸ்டிக் சாக்கு பைகளில், 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது

சத்தியமங்கலம்: தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு, காரில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து, தாளவாடி போலீசார், மகாஜனபுரம் சோதனைச்சாவடி அருகே, நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு வேன், காரில், 20 பிளாஸ்டிக் சாக்கு பைகளில், 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வாகனங்களில் வந்த தலமலையை சேர்ந்த ரகு, 28; கொடிபுரம் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர், 48, ஆகியோரிடம் விசாரித்தனர். இக்கலூரில் ரேஷன் அரிசியை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய, கர்நாடகாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர். வாகனங்களுடன் அரிசியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். சத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X