பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் பேச்சை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
தஞ்சாவூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், டிரைவர்கள், கண்டக்டர்கள், இன்று (அக்.,01) காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன், பேச்சு, கண்டிப்பு, போக்குவரத்து தொழிலாளர்கள், திடீர் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், டிரைவர்கள், கண்டக்டர்கள், இன்று (அக்.,01) காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக நகரப் பணிமனையில், காலை 5 மணி முதல் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ்களை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொ.மு.ச உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.


தாக்க சொன்ன துரைமுருகன் கண்டக்டர்கள் வேலை நிறுத்தம்

latest tamil news



தகவலறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோர் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் 7.15 மணியளவில் பஸ்களை இயக்கத் தொடங்கினார். இப்போராட்டத்தால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurali Srinivasan - Chennai,இந்தியா
01-அக்-202121:21:03 IST Report Abuse
Balamurali Srinivasan தரக்குறைவாக பேசினால் அங்கேயே செருப்பால் அடிக்க வேண்டும். அது தான் சரி. திமிர் புடிச்சவனுங்க ஒழுங்கா வேலை பாக்கறதில்லை.
Rate this:
sridhar - Chennai,இந்தியா
01-அக்-202121:38:33 IST Report Abuse
sridharஉன் கருத்து கூட தரக்குறைவான இருக்கு , என்ன செய்யலாம் சொல்லு ....
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அதெல்லாம் பெண்களே பார்த்துக் கொள்வார்கள்
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
01-அக்-202119:17:59 IST Report Abuse
Poongavoor Raghupathy திமுகவின் கெடுதலுக்கு மூன்று தலைவர்கள் நிசசயம் பங்கு அளிப்பார்கள். அவர்கள் துரைமுருகன் , உதயநிதி , வீரமணி .கே . துரைமுருகன் வைகோவை துரோகி என்றார். உதயநிதி மக்களை தங்கத்தை அடகுவைக்கச்சொல்லி ஏமாற்றினார் மேலும் நிட்டை நிறுத்தப்போவதாக ஏமாற்றினார். வீரமணி பெரியார் சிலையை வைத்து கோவிலில் நடக்கும் அன்னதானத்தை பார்த்து மௌனம் கார்க்கிறார். ஸ்டாலினுக்கு என்னும் இரண்டு தலைவலிகள் பீ டி யாரும் வைகோவும். வைகோ பழையபடி திரும்பினாரானால் அவரது பேச்சை ஸ்டாலினால் தாங்கவே முடியாது. வைகோ எப்போதுவேண்டுமானாலும் பிரளுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X