அமைச்சர் துரைமுருகன் பேச்சை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் பேச்சை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (61)
Share
தஞ்சாவூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், டிரைவர்கள், கண்டக்டர்கள், இன்று (அக்.,01) காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன், பேச்சு, கண்டிப்பு, போக்குவரத்து தொழிலாளர்கள், திடீர் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், டிரைவர்கள், கண்டக்டர்கள், இன்று (அக்.,01) காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக நகரப் பணிமனையில், காலை 5 மணி முதல் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ்களை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொ.மு.ச உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.


latest tamil news


தகவலறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோர் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் 7.15 மணியளவில் பஸ்களை இயக்கத் தொடங்கினார். இப்போராட்டத்தால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X