பொது செய்தி

தமிழ்நாடு

4ல் ஐ.டி.ஐ., வளாகத்தில் தொழில் பழகுனர் முகாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சேலம்: அக்., 4ல், சேலம் ஐ.டி.ஐ., வளாகத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் தொழில் பழகுனர் சட்டப்படி, அரசு, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் பழகுனர்களை ஆண்டுதோறும் சேர்த்து, மாதம், 8,050 ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்க வேண்டும். தொழிற்சாலை, தொழில் பயிற்சி

சேலம்: அக்., 4ல், சேலம் ஐ.டி.ஐ., வளாகத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் தொழில் பழகுனர் சட்டப்படி, அரசு, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் பழகுனர்களை ஆண்டுதோறும் சேர்த்து, மாதம், 8,050 ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்க வேண்டும். தொழிற்சாலை, தொழில் பயிற்சி பெறும் மாணவர்களை இணைக்கும் பொருட்டு, அந்தந்த மாவட்டங்களில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட தொழில் பழகுனர் சேர்க்கை முகாம், அக்., 4ல், சேலம் ஐ.டி.ஐ., வளாகத்தில், காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. இதுவரை பழகுனர் பயிற்சி முடிக்காத பயிற்சியாளர், உண்மை சான்றுகளுடன் பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X