பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
தலைவாசல்: பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைவாசல் வேளாண் உதவி இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: தலைவாசல், வீரகனூர் சுற்றுவட்டாரங்களில் மக்காச்சோளம், நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. விதைப்பு முதல் அறுவடை வரை பயிர் காலத்தில், வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட அசாதாரண சூழலால், பயிர்களுக்கு

தலைவாசல்: பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைவாசல் வேளாண் உதவி இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: தலைவாசல், வீரகனூர் சுற்றுவட்டாரங்களில் மக்காச்சோளம், நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. விதைப்பு முதல் அறுவடை வரை பயிர் காலத்தில், வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட அசாதாரண சூழலால், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு, சிறப்பு பருவம், 2021 - 22 திட்டத்தில், பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, மக்காச்சோளம் பயிர், 416 ரூபாய், நெல் சம்பா, 519 ரூபாய், பருத்தி, 642 ரூபாய் என பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்தில் இணைய வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகல், பட்டா, அடங்கல் ஆகியவற்றுடன், மக்காச்சோளம், பருத்தி பயிருக்கு, வரும், 31 வரையும், நெல்லுக்கு, நவ., 15 வரையும் பிரீமியம் செலுத்த அவகாசம் உள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X