பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: கால்நடை பராமரிப்பு ஆலோசனை

Added : அக் 01, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், வானிலை அடிப்படையில் வேளாண் ஆலோசனை, கால்நடை பராமரிப்பு குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், வானிலை பதிவாளர் பிரபாகரன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், அடுத்த நான்கு நாளுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது. இளம் கோழிக்குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்து வளர்க்கும்போது, 4 முதல், 5 வாரங்களுக்கு, ஒரு

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், வானிலை அடிப்படையில் வேளாண் ஆலோசனை, கால்நடை பராமரிப்பு குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், வானிலை பதிவாளர் பிரபாகரன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், அடுத்த நான்கு நாளுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது. இளம் கோழிக்குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்து வளர்க்கும்போது, 4 முதல், 5 வாரங்களுக்கு, ஒரு கோழி குஞ்சுக்கு, 2 வாட் வீதம் செயற்கை வெப்பம் அளிக்க வேண்டும். பண்ணைகளில் சாரல் மழையால் ஈரம் உண்டாவதை தடுக்க, பக்கவாட்டில் தார்ப்பாலின், சில்பாலின் பைகளை கட்டி தொங்கவிடவும். மழைக்காலங்களில், மாடுகளின் கொட்டகை சுத்தமாக, தண்ணீர் தேங்காதபடி செய்ய வேண்டும். மாடுகளில் மடி நோய் உண்டாவதை தடுக்க, பால் கறப்பதற்கு முன், பின் பொட்டாசியம் பர்மாங்கனேட் கிருமிநாசினியை தண்ணீரில் கலந்து, மடி, பால் கறப்பவரின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆடுகளில் இனப்பெருக்க காலத்துக்கு, 2 முதல், 3 வாரங்களுக்கு முன், பெட்டை(பெண்) ஆடுகளுக்கு, 25 சதவீதம் தீவனங்களை அதிகமாக அளிப்பதன் மூலம் பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். கால்நடைகளுக்கு, 25 முதல், 30 கிராம் கனிம கலவையை சேர்ப்பது இனப்பெருக்கத்துக்கு தேவையான அத்யாவசிய தாதுக்களை வழங்குகிறது. இது, கருவுறாமையை குறைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X