பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்கு வார விழா: ஓவியம், கட்டுரை போட்டி

Added : அக் 01, 2021
Share
Advertisement
சேலம்: வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, சேலம், வனத்துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, போட்டி நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு, 3 பிரிவாக, ஓவியம், கட்டுரை போட்டி நடக்கிறது. அதில், 400 வார்த்தைக்கு கட்டுரை எழுதுதல், 6 முதல், 8ம் வகுப்பு ஒரு பிரிவு, 9 முதல், பிளஸ் 2 வரை மற்றொரு பிரிவு என, போட்டி நடக்கிறது. ஓவியம், கட்டுரையை, பி.டி.எப்., மூலம் அனுப்ப வேண்டும். கல்லூரி

சேலம்: வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, சேலம், வனத்துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, போட்டி நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு, 3 பிரிவாக, ஓவியம், கட்டுரை போட்டி நடக்கிறது. அதில், 400 வார்த்தைக்கு கட்டுரை எழுதுதல், 6 முதல், 8ம் வகுப்பு ஒரு பிரிவு, 9 முதல், பிளஸ் 2 வரை மற்றொரு பிரிவு என, போட்டி நடக்கிறது. ஓவியம், கட்டுரையை, பி.டி.எப்., மூலம் அனுப்ப வேண்டும். கல்லூரி மாணவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், அகஸ்தியமலை யானை காப்பகம் உள்ளிட்ட தலைப்புகளில், 'லோகோ' டிசைன் செய்ய வேண்டும். நீர்பறவை, நகர உயிரினங்கள், பாலூட்டி சூழலியல், பருவநிலை மாற்ற காட்டு வாழ்க்கை உள்ளிட்ட தலைப்புகளில் குறும்பட போட்டி உள்ளது. அதில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர், 3 நிமிடம், 18 வயதுக்கு மேல், 5 நிமிடம் முதல், 10 நிமிடத்துக்குள் குறும்படம் எடுத்து அனுப்ப வேண்டும். இப்போட்டியில் பங்கு பெறுவோர், http;//salemforest.in/wlwc/oct 2021.php எனும் இணையதளத்தில், பெயர்களை பதிவு செய்ய வேண்டும். wlw2021salem@gmail.com என்ற முகவரியில் படைப்புகளை, அக்., 3 மாலை, 4:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். தகவலுக்கு, 86107 47543 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X