சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் தீக்குளிக்க முயற்சி

Added : அக் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்த, 60 வயது முதியவர், திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி விசாரித்தனர். அப்போது, அவர் கூறுகையில், 'நங்கவள்ளி, தேவேந்திரன் தெருவை சேர்ந்த, என் பெயர் நரசிம்மராஜ், 63. அதே பகுதியை சேர்ந்த பா.ம.க.,வினர் இருவருக்கு, 4.5 ஏக்கர் நிலத்தை, 5 ஆண்டுக்கு

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்த, 60 வயது முதியவர், திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி விசாரித்தனர். அப்போது, அவர் கூறுகையில், 'நங்கவள்ளி, தேவேந்திரன் தெருவை சேர்ந்த, என் பெயர் நரசிம்மராஜ், 63. அதே பகுதியை சேர்ந்த பா.ம.க.,வினர் இருவருக்கு, 4.5 ஏக்கர் நிலத்தை, 5 ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டேன். குத்தகை காலம் முடிந்தும், நிலத்தை விட மறுக்கின்றனர். இதுகுறித்து மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஏமாற்றுவதை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்றேன்' என்றார். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X