வரி மட்டும் வாங்குறீங்க... சாக்கடைய கட்ட மாட்டேங்கறீங்களே!

Added : அக் 01, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடி பேரூராட்சியில், 6,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள வீடு, நிறுவனங்களுக்கு, பேரூராட்சி சார்பில், வீடு, சொத்து உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், கணபதி கவுண்டர், 1, 2, 3வது தெருக்கள், வைத்திய படையாட்சி, 6, 7வது தெரு, அய்யா கவுண்டர், 3, 4, 10வது தெரு, செல்லியம்மன் நகர், 1, 2, 3வது தெருக்கள் என, பல்வேறு வீதிகளில் சாக்கடை வசதி இல்லை. மக்கள்,

வாழப்பாடி: வாழப்பாடி பேரூராட்சியில், 6,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள வீடு, நிறுவனங்களுக்கு, பேரூராட்சி சார்பில், வீடு, சொத்து உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், கணபதி கவுண்டர், 1, 2, 3வது தெருக்கள், வைத்திய படையாட்சி, 6, 7வது தெரு, அய்யா கவுண்டர், 3, 4, 10வது தெரு, செல்லியம்மன் நகர், 1, 2, 3வது தெருக்கள் என, பல்வேறு வீதிகளில் சாக்கடை வசதி இல்லை. மக்கள், கழிவுநீரை சாலையில் விடும் அவலம் தொடர்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று அபாயம் நிலவுகிறது. மழைக்காலங்களில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து வீதிகளில் தேங்குகிறது. தொடர்ந்து கழிவு நீர் சாலையில் விடப்படுவதால், சாலையும் சேதமாகி விடுகிறது. இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், சாக்கடை கட்ட, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்(பொ) கூறுகையில், ''சாக்கடை இல்லாத தெருக்களை கணக்கெடுத்து, தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு குறைந்த தொகை மட்டும் ஒதுக்குவதால் சில இடங்களில் மட்டும் சாக்கடை வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இதற்கு போதிய தொகை தமிழக அரசிடமிருந்து வராதது தான் காரணம். நிதி ஒதுக்கப்பட்டால், அனைத்து பகுதிக்கும் சாக்கடை வசதி ஏற்படுத்தி தரப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X