பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த முதல்வரிடம் பா.ம.க., - எம்.எல்.ஏ., மனு

Added : அக் 01, 2021
Share
Advertisement
தர்மபுரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டார். அவரிடம் தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியை போக்க, மழை காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நல்லம்பள்ளி தாலுகாவில், புதிதாக அரசு

தர்மபுரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொண்டார். அவரிடம் தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியை போக்க, மழை காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நல்லம்பள்ளி தாலுகாவில், புதிதாக அரசு வட்டார தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும். இண்டூர், பாளையம்புதூர், தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதுடன், 24 மணி நேரமும் இயக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். சாமிசெட்டிப்பட்டி, ஜருகுவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும். ஓசூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும், வீட்டு வசதிவாரிய அலுவலகத்தை பிரித்து, தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு புதிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X