பொது செய்தி

தமிழ்நாடு

பால் கொள்முதல் நிலுவை: ஸ்டாலினிடம் ஆதங்கம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
வத்தல்மலை: பால் கொள்முதல் தொகை நிலுவையில் உள்ளதாக, முதல்வர் ஸ்டாலினிடம் விவசாயி ஒருவர் ஆதங்கத்துடன் கூறினார். தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில், வத்தல்மலையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், இப்பகுதியில் காபி தூள் நிறுவனத்தை அமைக்க வேண்டும் என,

வத்தல்மலை: பால் கொள்முதல் தொகை நிலுவையில் உள்ளதாக, முதல்வர் ஸ்டாலினிடம் விவசாயி ஒருவர் ஆதங்கத்துடன் கூறினார். தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் மக்களுடன் கலந்துரையாடல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில், வத்தல்மலையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், இப்பகுதியில் காபி தூள் நிறுவனத்தை அமைக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், பெரும்பாலான விவசாய, மகளிர் சுய உதவிக்குழுவினர் அரசின் திட்டங்களை புகழ்ந்து பேசி வந்தனர். இதில் விவசாய குழுவை சேர்ந்த ராஜா என்பவர், 'ஒகேனக்கல் குடிநீர் திட்டம் வழங்கியது போல், விவசாய பாசனத்துக்கு ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பால் கொள்முதலில், ஒன்பது வார நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும்' என, ஆதங்கத்துடன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X