சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்திய கார் மற்றொரு காருடன் மோதி விபத்து

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் குட்கா கடத்திய கார், மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை, 7:30 மணியளவில், பத்தலப்பள்ளி பகுதி சர்வீஸ் சாலையில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் குட்கா கடத்திய கார், மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை, 7:30 மணியளவில், பத்தலப்பள்ளி பகுதி சர்வீஸ் சாலையில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மாருதி எர்டிகா கார் சென்று கொண்டிருந்தது. அதேநேரத்தில், பெங்களூருவிலிரிந்து மதுரைக்கு செல்வதற்காக பாலமுருகன், ஆகாஷ், வேல்முருகன் ஆகிய மூவர் வோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் வந்துள்ளனர். அவர்கள் பத்தலப்பள்ளி நட்சத்திர ஓட்டல் அருகில் உள்ள சர்வீல் ரோட்டிலிருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றுள்ளனர். அப்போது, இரு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதி தலைக்குப்புற கவிழ்ந்தன. அதில் சென்னைக்கு சென்ற காரை ஓட்டி வந்த பக்ருதீன், 25, என்பவர் படுகாயமடைந்தார். மேலும் அவரது காரில், ஆறு மூட்டைகளில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தி சென்றது தெரிந்தது. அவரை மீட்ட ஹட்கோ போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, குட்கா பொருட்கள் கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு காரில், மதுரைக்கு பயணித்த மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X