பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய இணை இயக்குனர் வேண்டுகோள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதூரில், விவசாயி சிவன் சாகுபடி செய்துள்ள பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி வயலை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவர் விவசாயிகளிடம் பேசியதாவது: கருப்பு கவுனி நெல், 160 நாட்கள் வயது உடையது. 25 முதல், 30

கிருஷ்ணகிரி: பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதூரில், விவசாயி சிவன் சாகுபடி செய்துள்ள பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி வயலை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவர் விவசாயிகளிடம் பேசியதாவது: கருப்பு கவுனி நெல், 160 நாட்கள் வயது உடையது. 25 முதல், 30 நாட்கள் வயதுடைய நாற்றினை நடவு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், பாரம்பரிய நெல் விவசாயிகளை பாதுகாக்கும் அறிவிப்பினை வெளியிட்டார். இதையடுத்து பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பயிர் விளைச்சல் போட்டி நடத்தி, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. பயிர் விளைச்சல் போட்டியில் பங்குபெற விவசாயிகள், 100 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X