வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குமரவேல் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் வாழ்த்தி பேசினார். இதில் ஸ்ரீதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குமரவேல் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் வாழ்த்தி பேசினார். இதில் ஸ்ரீதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த, வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்தபடி, 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதேபோல ஓசூர் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X