தமிழ்நாடு

கண்துடைப்புக்காக நடக்கும் மக்கள் குறை தீர் கூட்டம்: கி.கிரி கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுப்பாரா?

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், மக்கள் குறைதீர் கூட்டம் மூலம், மக்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில்லை; கண்துடைப்புக்காக நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை தோறும் வேப்பனஹள்ளி, பர்கூர், பாரூர், சூளகிரி, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், மக்கள் குறைதீர் கூட்டம் மூலம், மக்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில்லை; கண்துடைப்புக்காக நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை தோறும் வேப்பனஹள்ளி, பர்கூர், பாரூர், சூளகிரி, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனுவை பெட்டியில் போட்டு செல்கின்றனர். அதில் பெரும்பாலானவை நிலப்பிரச்னை, ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து, வீட்டுமனை, நில அளவை, வேலைவாய்ப்பு, ஓ.ஏ.பி., கோரிய விண்ணப்பங்களாக உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை.

புரோக்கர்கள் ஆதிக்கம்: கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதுவதற்கு, இடைத்தரகர்களாக மாறி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு சலுகைகள் பெற, 200 ரூபாய் கொடுத்து மனு எழுதினால் உடனடி தீர்வு என கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பலும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே முகாமிட்டு பணம் பறிக்கின்றனர். அதில் சிலர், தனக்கு அதிகாரிகளை தெரியும் என கூறி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவைகளை பெற்று தருவதாக கூறி, அப்பாவி மக்களிடம், 500 முதல் 1,500 ரூபாய் வரை வசூலித்து விடுகின்றனர். இவர்களை பற்றி நன்கு தெரிந்தும் அவர்கள் மீது அதிகாரிகள் புகார் கூறுவது இல்லை; பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு முதல் நேற்று வரை, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் மொத்தம், 15 ஆயிரத்து, 290 மனுக்கள் புகாராக அளிக்கப்பட்டு அதில், 3,536 மனுக்கள் ஏற்கப்பட்டும், 3,777 மனுக்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. 7,694 மனுக்கள் தீர்வு எட்டப்படாமல் உள்ளன. கடந்த காலங்களில் கொரோனா பரவல் எதிரொலியாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இருப்பினும் பெறப்பட்ட, 3,637 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, அரசு மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளதால், பலதரப்பட்ட தீர்வில்லா பிரச்னைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியவுடன் புகார் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை இருப்பதால் பிரச்னைகள் விரைந்து தீர்வு காணப்படும். இவ்வாறு கூறினர்.

தீக்குளிப்பு பேஷன்: முதியவர்கள், விவசாயிகள், நில ஆக்கிரமிப்பில் சிக்கியவர்கள், அடிப்படை உரிமைகள் கிடைக்காதவர்கள் உட்பட கடந்த, 10 ஆண்டுகளில் தொடர்ந்து மனு அளித்து வரும் மக்கள், தீர்வு கிடைக்காத விரக்தியின் உச்சத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வதும், அது செய்தியாவதும் பேஷனாகி வருகிறது. நிலப்பிரச்னைகளை உடனடியாக தீர்க்க மாவட்டத்தில் நில அளவையர்கள் போதுமான அளவில் இல்லை. மலைக்கிராம மக்களின் அடிப்படை தேவை பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்பிரச்னைகளில் கலெக்டர் தலையிட்டு, துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X