பொது செய்தி

தமிழ்நாடு

இடநெருக்கடியில் அங்கன்வாடி குழந்தைகள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வேம்பள்ளியில், அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, வேம்பள்ளி, இண்டிகானூர், தாசம்பட்டி, கிருஷ்ணேகவுண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, மொத்தம், 53க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுக்கு முன், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழ துவங்கியது. அதனால், குழந்தைகளின்

ஓசூர்: சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வேம்பள்ளியில், அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, வேம்பள்ளி, இண்டிகானூர், தாசம்பட்டி, கிருஷ்ணேகவுண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, மொத்தம், 53க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுக்கு முன், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழ துவங்கியது. அதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அங்குள்ள தனியார் ஓட்டு கட்டடத்துக்கு, அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டது. இதற்கு மாதந்தோறும், 700 ரூபாய் வாடகை செலுத்தப்படுகிறது. ஆனால், கட்டடத்தில் போதிய இடவசதியின்றி, குழந்தைகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். உணவு சமைத்து பரிமாற கூட சரியான இடவசதி இல்லை. இருந்தும், மூன்று ஆண்டுக்கு முன், மோசமான நிலையில் இருந்ததால் கைவிடப்பட்ட அங்கன்வாடி கட்டடம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. குழந்தைகள் நலன் கருதி, பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X