பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ.20 கோடி முறைகேடு போஸ்டரால் பரபரப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: முதல்வர் வருகை தரும் போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் சம்பளம் வழங்குவதில், 20 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக போஸ்டர்கள் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.முதல்வர் ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வருகை தந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள

கிருஷ்ணகிரி: முதல்வர் வருகை தரும் போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் சம்பளம் வழங்குவதில், 20 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக போஸ்டர்கள் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வர் ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வருகை தந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள மேம்பாலத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தில், 20 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கும் திட்டம் அலகு, 1, 2, 3, 4, 5ன், மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு, 600க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணியாளர்களுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்காமல், மிகவும் குறைந்த அளவு ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் வழங்கி வருகின்றனர். இதில், 2018 முதல் தற்போது வரை, 20 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும், முறைகேட்டை தடுத்து நிறுத்தவில்லை. மனுவின் மீது நடவடிக்கை எடுத்து, முறைகேட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து, தி.மு.க.,வினர் ஓட்டிய போஸ்டர்கள் மீதே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X