தமிழ்நாடு

தர்மபுரியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் மையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

Added : அக் 01, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் வேளாண், பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பிற துறைகள் சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். பின்னர், மகப்பேறு மற்றும்

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் வேளாண், பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பிற துறைகள் சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். பின்னர், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை பார்வையிட்டார். விழாவில், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய, ஏழு பஞ்., தலைவர்கள், சுகாதார செவிலியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கி பாராட்டினார். மூன்று கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்துக்கு அக்.,2ல், 57வது பிறந்த நாளாகும். இம்மாவட்டத்துக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டம், தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பெரும்பாலான வளர்ச்சி திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதை, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேசன் மறுக்கமாட்டார்கள். தமிழகத்தில், 62 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. இதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், 64 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடந்து, தமிழகத்துக்கே முன்னோடியாக உள்ளது. சென்னை மேயராக ஸ்டாலின் இருந்த போது, மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிக பிரசவங்கள் நடந்ததற்காக அப்போதைய மத்திய அரசு, விருது வழங்கியது. மக்களை தேடி மருத்துவ முகாமில் இன்று (நேற்று) வரை, 13 லட்சத்து, 5,347 பேர் பயன் பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான, 12 லட்சத்து, 57 ஆயிரத்து,208 பேரில் இதுவரை, 8 லட்சத்து, 50 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் திவ்யதர்ஷினி, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நார்த்தம்பட்டி பஞ்., தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்: ஒகேனக்கல்லில் குடிநீர் திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், தர்மபுரி அடுத்த ஆட்டுகாரன்பட்டியில் உள்ள ஆக்சலியம் என்ற தனியார் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் கொரோனா நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். ஒகேனக்கல்லில் ஆய்வு பணியை முடித்து விட்டு தர்மபுரிக்கு திரும்பும் போது, பென்னாகரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் திடீரென நுழைந்தார். அங்கு, விடுதியில் பின்பற்றப்படும் கொரோனா நடவடிக்கை குறித்தும், மாணவர்களுக்கு விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விடுதியில் இருந்த, பிளஸ் 1 மாணவன் விஜயின் பிறந்த நாள் குறித்த தகவல் அறிந்த, முதல்வர் ஸ்டாலின், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். விஜய், பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, ஓராண்டு பள்ளி செல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் தான், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X