பொது செய்தி

இந்தியா

தூய்மை இந்தியா, அடல் மிஷன் 2.0; சிறப்பம்சங்கள் என்னென்ன?

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் பகுதியைத் துவக்கியுள்ளார். நகர்ப்புறங்களில் தூய்மையை கடைபிடிக்க அடல் மிஷன் என்கிற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். இவற்றுக்கு ஷங்கர் பட டைட்டில் போல '2.0' என்று பெயரிடப்பட்டுள்ளது.மக்கள் தொகை அதிகம் உள்ள பெருநகரங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் காற்றை சுவாசிக்க இந்த திட்டம்
PM Modi, Swachh Bharat Mission, Launch, 2nd Phase, தூய்மை இந்தியா, அடல் மிஷன், சிறப்பம்சங்கள்,

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் பகுதியைத் துவக்கியுள்ளார். நகர்ப்புறங்களில் தூய்மையை கடைபிடிக்க அடல் மிஷன் என்கிற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். இவற்றுக்கு ஷங்கர் பட டைட்டில் போல '2.0' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ள பெருநகரங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் காற்றை சுவாசிக்க இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் இதனை துவக்கி வைத்ததாகத் தெரிவித்துள்ளது. நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல மேற்கண்ட இந்த திட்டங்கள் உதவும் என கூறப்படுகிறது. விழாவில் வீட்டுமனை மற்றும் நகர்புற வாளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார்.


latest tamil news


மாசு படிந்த கருமை நிற கழிவுநீரை இல்லாமல் செய்ய இந்த திட்டங்கள் துணைபுரியும். மேலும் நகர்ப்புறங்களில் கழிவுநீர் பாதையை அமைத்து அவை வெளியேற ஏற்ற வழிகளை அமைக்க இந்த திட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாசுவை குறைத்தல், மறுசுழற்சி செய்தல், மறுபயன்பாடு ஆகிய மூன்று முறைகளை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இந்த திட்டத்தின் மூலமாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படும். நகர்ப்புறங்களில் பொது குழாய் இல்லாத இடங்களில் 2.68 கோடி பொது குடிநீர் குழாய் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10.5 கோடி மக்கள் பயன்பெற உள்ள இந்த திட்டங்களின் மூலமாக 2.64 கோடி திட கழிவு சேமிப்புத் தொட்டிகள் புதிதாக அமைக்கப்படும். மேலும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க அடல் மிஷன் திட்டம் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நீர் மேலாண்மைக்கு சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இந்த திட்டங்களில் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naresh Giridhar - Chennai,இந்தியா
01-அக்-202121:18:19 IST Report Abuse
Naresh Giridhar முதலில் மனத்தில் இருக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
01-அக்-202117:15:12 IST Report Abuse
venkatan Practically feasible solutions in collection, segregation transportation and safe disposal of waste material with enormous workforce, inducting local people, concurrent supervision with enforcement of las with carrot and stick policy are some of the key points.Insofar the local bodies are struggling these works without any significant and desirable results.Perhaps this should have been an ambitious project need to involve local bodies with community participation and strick rules for implementation.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
01-அக்-202115:13:06 IST Report Abuse
J.Isaac யாரும் முக கவசம் அணியவில்லையே. ஊருக்கு தான் உபதேசமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X