அரசியல் அமைப்புக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது; முத்தரசன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் அமைப்புக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது; முத்தரசன்

Added : அக் 01, 2021
Share
கோபி: ''அரசியல் அமைப்புக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது,'' என, இ. கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள இ. கம்யூ., கட்சி அலுவலகத்தில், மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் ஆகியோர், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது போட்டோவுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர்

கோபி: ''அரசியல் அமைப்புக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது,'' என, இ. கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள இ. கம்யூ., கட்சி அலுவலகத்தில், மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் ஆகியோர், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது போட்டோவுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் அமைப்புக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டின் பொது சொத்துக்களை எல்லாம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு, மத்திய அரசு விற்பனை செய்கிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. மின்சார திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. தொழிலாளர்களின் சட்டங்கள் அனைத்தும் பறித்து, 44 சட்டங்கள் என இருந்ததை, நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X