பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: கலெக்டர் பேச்சுவார்த்தையில் சமரசம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கரூர்: 'அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கிறோம்' என, கரூர் அருகே வடக்குபாளையம் கிராம மக்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்ட பஞ்., வார்டு எண்- 8ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த வார்டுக்குட்பட்ட வடக்குபாளையத்தில் குமரன் குடில், குமரன் லேஅவுட் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீர் தொட்டி, கழிவுநீர்

கரூர்: 'அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கிறோம்' என, கரூர் அருகே வடக்குபாளையம் கிராம மக்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் மாவட்ட பஞ்., வார்டு எண்- 8ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த வார்டுக்குட்பட்ட வடக்குபாளையத்தில் குமரன் குடில், குமரன் லேஅவுட் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீர் தொட்டி, கழிவுநீர் கால்வாய், தார்ச்சாலை, குழந்தைகள் பூங்கா உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கறுப்புக் கொடிகளை தெருவில் மற்றும் வீடுகளில் மக்கள் வைத்தனர். கலெக்டர் பிரபுசங்கர், சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 'பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். இதையடுத்து, தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக மக்கள் அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X