பொது செய்தி

தமிழ்நாடு

தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர் கோரிக்கை

Added : அக் 01, 2021
Share
Advertisement
சேலம்: அரசு உதவி பெறும், சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலத்தில் முதல்வர் ஸ்டாலினிடம், அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் அளித்த மனு: தமிழகத்தில், 2010 முதல், கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட நாள் முதல், அறிவிப்பு தேதியான, 2012 வரை, 10

சேலம்: அரசு உதவி பெறும், சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சேலத்தில் முதல்வர் ஸ்டாலினிடம், அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் அளித்த மனு: தமிழகத்தில், 2010 முதல், கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட நாள் முதல், அறிவிப்பு தேதியான, 2012 வரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், தகுதி தேர்வு இல்லாமல் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற ஐந்தாண்டு அவகாசம் அளிக்கப்பட்டது. கடந்த 2013ல், சிறுபான்மை உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களும் காப்பாற்றப்பட்டனர். ஆனால், சிறுபான்மையற்ற உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 1,000 ஆசிரியர்கள், பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பணிவரன்முறை உள்ளிட்ட எந்த வழக்கமான நடைமுறைகளும் அமல்படுத்தப்படாததால் வேதனையில் உள்ளோம். முதல்வர் ஸ்டாலின், தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து, 2010 ஆக., 23 முதல், 2012 நவ., 11 வரை நியமனம் பெற்ற சிறுபான்மையற்ற உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X