சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., நிறுவனத்தில் பணி வழங்குவதாக இளைஞர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி

Added : அக் 01, 2021
Share
Advertisement
சேலம்: ஐ.டி., நிறுவனத்தில் பணி வழங்குவதாக கூறி, இளைஞர், இளம்பெண்களிடம், 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதாவிடம், 50க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நேற்று அளித்த புகார் மனு: சேலம், ஐந்து ரோட்டை சேர்ந்தவர் முத்துகிரண், 31. இவர், மூன்று ரோட்டில் எல்.என்.டி., பெயரில் ஐ.டி., நிறுவனம்

சேலம்: ஐ.டி., நிறுவனத்தில் பணி வழங்குவதாக கூறி, இளைஞர், இளம்பெண்களிடம், 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதாவிடம், 50க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நேற்று அளித்த புகார் மனு: சேலம், ஐந்து ரோட்டை சேர்ந்தவர் முத்துகிரண், 31. இவர், மூன்று ரோட்டில் எல்.என்.டி., பெயரில் ஐ.டி., நிறுவனம் நடத்துவதாக சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்தார். அதில் பணியில் சேருவோருக்கு, மாதம், 50 ஆயிரம் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப்படும். விரும்புவோர், 20 ஆயிரம் முன்பணம் செலுத்தி பணியில் இணையலாம். கொரோனா காலம் என்பதால், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பணிபுரியலாம். எல்.என்.டி., நிறுவனம், செப்., 30ல், மூன்று ரோட்டில் உள்ள அலுவலகத்தை திறந்து செயல்படுத்தும் என தெரிவித்தார். அதை நம்பி, அவர் வங்கி கணக்கு, ஆன்லைன், கூகுள்பே, போன்பே மூலம் பணம் செலுத்தினோம். அத்துடன், அவர் நியமித்த பெண்கள், வீடுகளுக்கே வந்து நேரிலும் பணம் வசூலித்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, நூற்றுக்கணக்கான இளைஞர், இளம்பெண்கள் பணம் செலுத்தினர். அவர் தெரிவித்தபடி அலுவலகமும் திறக்கப்படவில்லை. அத்துடன் வாடகை தருவதாக உறுதி அளித்து பயன்படுத்தி வந்த புது காருடன் மாயமாகிவிட்டார். திட்டமிட்டு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த முத்துகிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், முத்துகிரண், தமிழக முக்கிய நகரங்களில் முகாமிட்டு, வேலை அளிப்பதாக கூறி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X