பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை;ரூ.3.20 லட்சம் பறிமுதல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட, நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத மூன்று லட்சத்து, 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், புதிய மனை வரன்முறை அங்கீகாரம், ஆஸ்ரமங்கள், மருத்துவமனைகள் கட்டுதல் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட, நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத மூன்று லட்சத்து, 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், புதிய மனை வரன்முறை அங்கீகாரம், ஆஸ்ரமங்கள், மருத்துவமனைகள் கட்டுதல் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மதியழகன், இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மைதிலி உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம், 12:00 மணிக்கு அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர் மோகனிடம் கணக்கில் வராத, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் மற்றும் அங்குள்ள ஊழியர்களிடம், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் என மொத்தம், மூன்று லட்சத்து, 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அனுமதி பெற விண்ணப்பித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்த விபரம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X