பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, இரண்டாம் வகுப்பு படித்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், போலி டாக்டர்கள் அதிளவு கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட ஊரக பணிகள் நல துணை இயக்குனர் விசுவநாதன் தலைமையிலான குழுவினர், 10 பேர் நேற்று நாட்றம்பள்ளி அருகே புதுப்பேட்டையில் ரோந்து பணியில்

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே, இரண்டாம் வகுப்பு படித்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், போலி டாக்டர்கள் அதிளவு கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட ஊரக பணிகள் நல துணை இயக்குனர் விசுவநாதன் தலைமையிலான குழுவினர், 10 பேர் நேற்று நாட்றம்பள்ளி அருகே புதுப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கிளினிக்கை ஆய்வு செய்தனர். அதில், புத்துக்கோவிலை சேர்ந்த ஜெயராமன், 55, என்பவர் இரண்டாம் வகுப்பு படித்து விட்டு, 25 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ்., என போர்டு மாட்டிக் கொண்டு, ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அந்த கிளினிக்கை சீல் வைத்தனர். ாட்றம்பள்ளி போலீசார் விசாரித்த, ஜெயராமனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X