பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டணி வைத்து போட்டியிட்ட கட்சிகள் காணாமல் போய் விட்டன: சீமான்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: ''கூட்டணி வைத்து போட்டியிட் கட்சிகள், காணாமல் போய் விட்டன,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க சீமான், நேற்று திருப்பத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது: நமக்கு முன்பு தனித்து போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் வளர்ந்து

திருப்பத்தூர்: ''கூட்டணி வைத்து போட்டியிட் கட்சிகள், காணாமல் போய் விட்டன,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.


ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க சீமான், நேற்று திருப்பத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது: நமக்கு முன்பு தனித்து போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் வளர்ந்து வரும் நேரத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் காணாமல் போய் விட்டனர். அதே போல நான் செல்ல மாட்டேன். எங்களது பாதை தனித்துவமானது. இதனால் தான் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும், காசு கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? நாம் தமிழர் கட்சி செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை கூறி வெற்றி பெறும். தி.மு.க.,வினர் எனக்கு கொலை மிரட்டல் தரவில்லை. என்னை பார்த்து தான் பயந்து கொண்டிருக்கின்றனர். எனது கட்சி தொண்டர்கள், அவரது குடும்பத்தினர், பெண் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தி.மு.க.,வின், 200 நாள் ஆட்சியில் ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X