இது உங்கள் தேசம்... வெளியேற வேண்டாம்: புலம்பெயர்வோரிடம் கெஞ்சும் தலிபான்கள்

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
காபூல்: ஆப்கனில் இருந்து புலம்பெயரும் மக்களை தடுத்து நிறுத்தி, 'இது உங்கள் தேசம்... இதை விட்டு வெளியேற வேண்டாம்' என, தலிபான்கள் கெஞ்சி வருகின்றனர்.ஆப்கானிஸ்தானை கடந்த ஆக., 15ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்களது கட்டுப்பாட்டில் வாழ விரும்பாத ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றனர். விமானம் மூலமாக மட்டும் 1.24 லட்சம் பேர் வெளியேறி

காபூல்: ஆப்கனில் இருந்து புலம்பெயரும் மக்களை தடுத்து நிறுத்தி, 'இது உங்கள் தேசம்... இதை விட்டு வெளியேற வேண்டாம்' என, தலிபான்கள் கெஞ்சி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை கடந்த ஆக., 15ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்களது கட்டுப்பாட்டில் வாழ விரும்பாத ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றனர். விமானம் மூலமாக மட்டும் 1.24 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர்.



latest tamil news



இதுகுறித்து ஐ.நா.,வின் அகதிகள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், 'தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கனில் வேலையில்லா திண்டாட்டமும், பணப்புழக்கம் இல்லாததும் மக்களை வாட்டி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஆப்கனில் 91 சதவீத மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே வந்துவிடுவர். அதனால், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆப்கனில் இருந்து 5 லட்சம் பேராவது அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்வர்' என, தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், ஆப்கனில் இருந்து பாகிஸ்தான் செல்வதற்கான எல்லைகளில் பிரதானமானது ஸ்பின் போல்டக் பகுதி. அங்கிருந்து 300 மீட்டர் சென்றால் பாகிஸ்தான் வந்துவிடும். இது வழியாக தினசரி 9,000 பேர் வரை வெளியேறி வருகின்றனர். இதையடுத்து ஸ்பின் போல்டக் பகுதியில் முகாமிட்ட தலிபான்கள், அந்த வழியாக வெளியேற முற்படும் ஆப்கன் மக்களைத் தடுத்து, 'இது உங்கள் தேசம்... இதை விட்டு வெளியேற வேண்டாம். அவ்வாறு செல்வது ஆப்கன் கலாச்சாரத்தை அவமதிப்பதாகும்' என, கெஞ்சி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202106:43:01 IST Report Abuse
NicoleThomson அது என்னவோ தெரியலை ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு காரணத்தை வைத்து லட்சக்கணக்கான முஸ்லீம் மக்கள் ஒரு முஸ்லீம் நாட்டில் இருந்து பல நாடுகளுக்கு இடம் பெயருறாங்க , இது தெரிந்து நடப்பதா தெரியாம நடப்பதா?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
02-அக்-202116:08:33 IST Report Abuse
mathimandhiri அது அப்படி தான் இருக்கும் போல///
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
02-அக்-202110:29:43 IST Report Abuse
mathimandhiri மொதல்ல நீங்க யாராச்சும் ஒத்தனாவது ,,, கைல துப்பாக்கி இல்லாம நில்லுங்கடா பாக்கலாம்,, காட்டுமிராண்டிகளா அப்புறம் பேசலாம்// ஒவ்வொருத்தன் கையிலும் இடுப்பிலும் அம்புட்டு துப்பாக்கி.. மிருகங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X