ஊட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் ரெய்டு: ரூ. 78 ஆயிரத்து 495 பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் 'ரெய்டு': ரூ. 78 ஆயிரத்து 495 பறிமுதல்

Added : அக் 01, 2021
Share
ஊட்டி:ஊட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் நடந்த திடீர் 'ரெய்டில்', 78 ஆயிரத்து 495 ரூபாய் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள, பத்திர பதிவு அலுவலகத்தில், நேற்று இரவு, ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறை, டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி மற்றும் குழுவினர், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அதில், கணக்கில் வராத, 78

ஊட்டி:ஊட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் நடந்த திடீர் 'ரெய்டில்', 78 ஆயிரத்து 495 ரூபாய் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள, பத்திர பதிவு அலுவலகத்தில், நேற்று இரவு, ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறை, டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி மற்றும் குழுவினர், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அதில், கணக்கில் வராத, 78 ஆயிரத்து 495 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அலுவலகத்தில் இருந்த, நான்கு ஊழியர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.டி.எஸ்.பி., சுபாஷினி கூறுகையில், ''ஊட்டியில் நடந்த சோதனையில், கணக்கில் வராத, 78 ஆயிரத்து 495 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ''துணைபதிவாளர் செந்தில் குமார் உட்பட மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. பிற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X