சென்னை: ‛‛அரசு வசதிளை சிதைக்க நினைக்காமல் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்ற வேண்டும்'' என யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 26 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள். தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணியாக அரசுப்பணி உள்ளது. இந்திய ஆட்சி பணி என்பது இளைஞர்களின் கனவு.

அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வு நடத்தி 325 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த மையம் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.சமூக நீதியை கடைபிடிக்கும் வகையில் அண்ணா மேலாண்மை நிலையம் தொடர்ந்து செயல்படுகிறது.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக குடிமைப்பணி பயிற்சி மையத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் பயிற்சி பெறும் வகையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.
அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் அதிகாரிகளுக்கு உள்ளது. இந்திய அளவில் உயர் பதவியில் இருக்கும்போது பிறந்த மண்ணையும், தாய்மொழியையும் மறக்க கூடாது. அரசு வசதிகளை சிதைக்க நினைக்காமல் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்ற வேண்டும். பிரச்னையை கண்டு பயந்து ஓடாமல், எங்கிருந்து கிளம்பியது என ஆராய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE