பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, திருப்பூர், நீலகிரியில் கூடுதலாக பெய்த பருவமழை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை:கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.ஜூன் 1 முதல் செப்.,30 வரையிலான நான்கு மாத காலம், தென்மேற்கு பருவமழை காலம். இந்த நான்கு மாத காலத்தில் கோவை மாவட்டத்துக்கு 1,033 மி.மீ., மழை கிடைத்துள்ளது. இது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டியதை காட்டிலும் 50 சதவீதம் கூடுதல் மழையாகும். மாவட்டத்தின் கிழக்குப்பகுதிகளை

கோவை:கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.ஜூன் 1 முதல் செப்.,30 வரையிலான நான்கு மாத காலம், தென்மேற்கு பருவமழை காலம். இந்த நான்கு மாத காலத்தில் கோவை மாவட்டத்துக்கு 1,033 மி.மீ., மழை கிடைத்துள்ளது.

இது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டியதை காட்டிலும் 50 சதவீதம் கூடுதல் மழையாகும். மாவட்டத்தின் கிழக்குப்பகுதிகளை காட்டிலும், மேற்கு மற்றும் மலையடிவார பகுதிகளுக்கு கூடுதலான மழை கிடைத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மாதத்தில் 153.8 மி.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு மழையை காட்டிலும் இரண்டு சதவீதம் கூடுதல். நீலகிரி மாவட்டத்தில் 1,109.7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இது, நான்கு மாதத்தில் பெய்யும் இயல்பு பருவமழையை காட்டிலும் 27 சதவீதம் அதிகம். ஈரோடு மாவட்டத்தில் இயல்பு மழையை காட்டிலும் ஒரு சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது. இம்மாவட்டத்தில் 257.8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X