இன்று முதல் ஏசி பஸ்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் 'ஏசி' பஸ்கள்

Added : அக் 01, 2021
Share
சென்னை:தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'ஏசி' பஸ்கள், ஐந்து மாதங்களுக்கு பின், இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில் சென்னை பஸ்கள் 48; விரைவு பஸ்கள் 340; விழுப்புரம் 92; சேலம் 50; கோவை 50; கும்பகோணம் 52; மதுரை 40; நெல்லை 30 என அனைத்து போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து, மொத்தம் 702 'ஏசி' பஸ்களை இயக்குகின்றன. இந்த பஸ்கள் இன்று முதல் இயக்க தயார் நிலையில்
 இன்று முதல் 'ஏசி' பஸ்கள்

சென்னை:தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'ஏசி' பஸ்கள், ஐந்து மாதங்களுக்கு பின், இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில் சென்னை பஸ்கள் 48; விரைவு பஸ்கள் 340; விழுப்புரம் 92; சேலம் 50; கோவை 50; கும்பகோணம் 52; மதுரை 40; நெல்லை 30 என அனைத்து போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து, மொத்தம் 702 'ஏசி' பஸ்களை இயக்குகின்றன. இந்த பஸ்கள் இன்று முதல் இயக்க தயார் நிலையில் உள்ளன. இவற்றில், எஸ்.இ.டி.சி., எனும் விரைவு போக்குவரத்து கழகம் மட்டும், 206 இருக்கை மற்றும் படுக்கை வசதியுடைய பஸ்களையும், 34 படுக்கை வசதியுடைய பஸ்களையும் இயக்குகிறது.அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமாக 702 'ஏசி' பஸ்கள் இருந்த போதும், பயணியரின் தேவைக்கேற்ப மட்டுமே, இயக்கப்பட உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X