முந்தைய அ.தி.மு.க., அரசு கஜானாவை காலியாக்கி விட்டது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முந்தைய அ.தி.மு.க., அரசு கஜானாவை காலியாக்கி விட்டது'

Added : அக் 01, 2021
Share
ராணிப்பேட்டை:''முந்தைய, அ.தி.மு.க., அரசு கஜானாவை காலியாக்கி விட்டு போய் விட்டதால், 303 வாக்குறுதிகள் நிறைவேறாமல் பாக்கியுள்ளது,'' என, கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேசினார்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டை மாவட்டம், சீக்கராஜபுரத்தில் நேற்று அவர் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்று ஒரு நாளைக்கு,

ராணிப்பேட்டை:''முந்தைய, அ.தி.மு.க., அரசு கஜானாவை காலியாக்கி விட்டு போய் விட்டதால், 303 வாக்குறுதிகள் நிறைவேறாமல் பாக்கியுள்ளது,'' என, கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேசினார்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டை மாவட்டம், சீக்கராஜபுரத்தில் நேற்று அவர் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்று ஒரு நாளைக்கு, 38 ஆயிரம் இருந்தது. முதல்வரின் தீவிர நடவடிக்கையால், இரண்டே மாதத்தில் கொரோனா எங்கே என கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில், 200க்கும் மேல் நிறைவேற்றி விட்டார். 303 வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் பாக்கியுள்ளது. இதற்கு காரணம் முந்தைய, அ.தி.மு.க., அரசு கஜானாவை காலியாக வைத்து விட்டு போய் விட்டனர். படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X